Monday 22 May 2017

அணுசக்தி முகமையும் இந்திய சீன பனிப்போரும்

இந்தியாவின் சவால்கள் :
தனி மனிதனை போலவே ஒரு நாடு முன்னேறும் போதும் ஏராளமான தடை கற்கள் இருக்கத்தான் செய்யுது. இப்போ அதுபோல ஒரு இந்திய பிரச்னையையும் அதுக்கு நாம என்ன செய்ய முடியும்ங்கிறதையும் பாப்போம்.
Non-Proliferation Treaty (NPT) :அணு ஆயுத பரவலாக்கள் தடுப்பு அமைப்பு ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அது இந்த உலக நாடுகளை 2 வகையா பிரிக்குது.

1. Nuclear Weapon States (NWS) (அணு ஆயுத நாடுகள்)
2. Non-Nuclear Weapon States (NNWS) (அணு ஆயுதம் வைத்திராத நாடுகள்ன்னு)


இதுல உள்ள கோல்மால் தனம் என்னன்னா , 1967 க்கும் முன்னாடி அணு ஆயுதம் வச்சுருந்தவுங்க மட்டும் தான் NWSல வருவாங்க. மத்தவுங்க எல்லாரும் NNWS குரூப். அதாவது அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்.

NPTல கையெழுத்து போட்டா அணு ஆயுத நாடுகள் எப்போது வேணாலும் , அணு ஆய்தம் இல்லாத நாடுகளோட அணு உலைகளையும் இன்ன பிற அணு ஆராய்ச்சி கூடங்களையும் சோதனை இடும் உரிமை NWS நாடுகளுக்கு உண்டு. அதுமட்டும் இல்லாம , NNWS நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை படிப்படியா குறைக்கணும்/அழிக்கனும். சரி இப்போ ஏன்டா இத சொல்றன்னு கேக்குறீங்களா..

NSG ங்கிற அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்துல(அணு சக்தி முகமை), கடந்த 2008-ல இருந்து உறுப்பினராக இந்தியா முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கு. இதுல உறுப்பினர் ஆனாதான் சர்வதேச நாடுகள் கிட்ட இருந்து தடையற்ற அணு ஆற்றலை தரும் மூலப்பொருட்கள் வார்த்தகம் (யுரேனியம்) செய்யமுடியும். மாசற்ற மாற்று எரிபொருள் என அறியப்படும் அணு ஆற்றல் என்பது இந்தியாவின் வருங்கால இன்றியமையா தேவை.

NSG ல உறுப்பினராகணும்ன்னா NTPல கையெழுத்து போட்ருக்கானும் ன்னு ஒரு விதி இருக்கு. ல கையெழுத்து போட்டுருதுங்கிறது சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிறது போல . NTPல இருந்து விலக்கு அளித்து NSGல இந்தியா உறுப்பினராக்க அமெரிக்கா ஏற்கனவே எடுத்த முயற்சிகளை பாகிஸ்தானை ஆயுதமா வச்சு சீனா முட்டுக்கட்டை போட்டுச்சு. ஏற்கனவே ஐ.நா-வுல நிரந்தர உறுப்பினராக இந்தியா வருவதற்கு சைனா முட்டுக்கட்டை போட்டுக்கிட்டு இருக்கு.

NPT ல விலக்கு என்பது இந்தியாவுக்கு மட்டும் எதோ புதுசா நடக்கபோறது இல்ல. ஏற்கனவே எலைட் அந்தஸ்து கொடுத்து பிரான்ஸ் NPTல கையெழுத்து போடாமலே NSGல அதுவும் NWSக்ரூப்ல இருக்கு. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிறதுபோல , சீனாவுக்கு நாம என்ன செஞ்சாலும் பயம் வந்து முட்டுக்கட்டை போடுறது எதுனாலன்ன சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளா அதிகம். அதுனாலதான் , இந்தியாவை சரியாக கையாலாவிடில் சீனா2.0 வா அது வளர்ந்துரும்ன்னு அந்நாட்டோட முன்னாள் பொருளாதார மேதை ஒருத்தர் சொல்லிருக்காரு.

இப்போ நாம செய்யவேண்டியது முடிஞ்ச அளவு சீன தயாரிப்புகளை தவிர்ப்பது தான். அது மறைமுகமா நம்மோட இந்திய சந்தையை வளமாக்கும். பெப்சி கோக்கை ஒரே நாளில் புறந்தள்ளிய நமக்கு இதுவும் சாத்தியமே.


-சேவற்கொடியோன்

No comments:

Post a Comment