Monday 22 May 2017

அணுசக்தி முகமையும் இந்திய சீன பனிப்போரும்

இந்தியாவின் சவால்கள் :
தனி மனிதனை போலவே ஒரு நாடு முன்னேறும் போதும் ஏராளமான தடை கற்கள் இருக்கத்தான் செய்யுது. இப்போ அதுபோல ஒரு இந்திய பிரச்னையையும் அதுக்கு நாம என்ன செய்ய முடியும்ங்கிறதையும் பாப்போம்.
Non-Proliferation Treaty (NPT) :அணு ஆயுத பரவலாக்கள் தடுப்பு அமைப்பு ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அது இந்த உலக நாடுகளை 2 வகையா பிரிக்குது.

1. Nuclear Weapon States (NWS) (அணு ஆயுத நாடுகள்)
2. Non-Nuclear Weapon States (NNWS) (அணு ஆயுதம் வைத்திராத நாடுகள்ன்னு)


இதுல உள்ள கோல்மால் தனம் என்னன்னா , 1967 க்கும் முன்னாடி அணு ஆயுதம் வச்சுருந்தவுங்க மட்டும் தான் NWSல வருவாங்க. மத்தவுங்க எல்லாரும் NNWS குரூப். அதாவது அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்.

NPTல கையெழுத்து போட்டா அணு ஆயுத நாடுகள் எப்போது வேணாலும் , அணு ஆய்தம் இல்லாத நாடுகளோட அணு உலைகளையும் இன்ன பிற அணு ஆராய்ச்சி கூடங்களையும் சோதனை இடும் உரிமை NWS நாடுகளுக்கு உண்டு. அதுமட்டும் இல்லாம , NNWS நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை படிப்படியா குறைக்கணும்/அழிக்கனும். சரி இப்போ ஏன்டா இத சொல்றன்னு கேக்குறீங்களா..

NSG ங்கிற அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்துல(அணு சக்தி முகமை), கடந்த 2008-ல இருந்து உறுப்பினராக இந்தியா முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கு. இதுல உறுப்பினர் ஆனாதான் சர்வதேச நாடுகள் கிட்ட இருந்து தடையற்ற அணு ஆற்றலை தரும் மூலப்பொருட்கள் வார்த்தகம் (யுரேனியம்) செய்யமுடியும். மாசற்ற மாற்று எரிபொருள் என அறியப்படும் அணு ஆற்றல் என்பது இந்தியாவின் வருங்கால இன்றியமையா தேவை.

NSG ல உறுப்பினராகணும்ன்னா NTPல கையெழுத்து போட்ருக்கானும் ன்னு ஒரு விதி இருக்கு. ல கையெழுத்து போட்டுருதுங்கிறது சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிறது போல . NTPல இருந்து விலக்கு அளித்து NSGல இந்தியா உறுப்பினராக்க அமெரிக்கா ஏற்கனவே எடுத்த முயற்சிகளை பாகிஸ்தானை ஆயுதமா வச்சு சீனா முட்டுக்கட்டை போட்டுச்சு. ஏற்கனவே ஐ.நா-வுல நிரந்தர உறுப்பினராக இந்தியா வருவதற்கு சைனா முட்டுக்கட்டை போட்டுக்கிட்டு இருக்கு.

NPT ல விலக்கு என்பது இந்தியாவுக்கு மட்டும் எதோ புதுசா நடக்கபோறது இல்ல. ஏற்கனவே எலைட் அந்தஸ்து கொடுத்து பிரான்ஸ் NPTல கையெழுத்து போடாமலே NSGல அதுவும் NWSக்ரூப்ல இருக்கு. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிறதுபோல , சீனாவுக்கு நாம என்ன செஞ்சாலும் பயம் வந்து முட்டுக்கட்டை போடுறது எதுனாலன்ன சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளா அதிகம். அதுனாலதான் , இந்தியாவை சரியாக கையாலாவிடில் சீனா2.0 வா அது வளர்ந்துரும்ன்னு அந்நாட்டோட முன்னாள் பொருளாதார மேதை ஒருத்தர் சொல்லிருக்காரு.

இப்போ நாம செய்யவேண்டியது முடிஞ்ச அளவு சீன தயாரிப்புகளை தவிர்ப்பது தான். அது மறைமுகமா நம்மோட இந்திய சந்தையை வளமாக்கும். பெப்சி கோக்கை ஒரே நாளில் புறந்தள்ளிய நமக்கு இதுவும் சாத்தியமே.


-சேவற்கொடியோன்

Thursday 12 March 2015

எதிர்பார்பில்லாத அன்பைத்தான் காதல் ன்னு

பொத்தாம்  பொதுவா ஒரு பதிவே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

ஆக மிகசிறந்த மடத்தனம் என்பது காதலிப்பதும் அதற்காக தற்கொலை பன்னிகிறதும் தான். குடும்ப சூழல் காரணமாகவோ நோயின் தாக்கம் காரணமாகவோ தற்கொலை முடிவுக்குவந்தால் அவர்களை ஆறுதல்படுத்தி வாழ்க்கைன்னா என்னான்னு(நமக்கு தெரிஞ்சத )எடுத்து சொல்லி கடவுள் இருக்கான் ன்னு சொல்லலாம். காதல் க்காக சுசைடுன்னு ஒன்னு வந்தா  நம்ம   செலவுல  விஷம் தான் வங்கி தரத்தான் முடியும்.

என் நண்பன் ஒருத்தன் இஸ்கூல் படிக்கையுல லவ் பெயிலியர் ன்னு  சிகரெட்ல கைல அஞ்சாறு  சூடு போட்டு இருந்தான் .. இந்த உலகத்தில நம்ம விட ஒரு முட்டாள் இருக்கான்னு நினைக்கவைத்த தினம்அன்று. அதுக்கப்புறம் இன்று வரை நான் தேடுற ஒரே விஷயம், லவ்ன்னா என்னவா இருக்கும்ன்னு தான். எதிர்பார்பில்லாத அன்பைத்தான் காதல் ன்னு சொல்லலாம். அத படைத்தவன் கிட்டயும் அம்மா கிட்டயும் மட்டும் தன பெற முடியும் . வரப்போற வாழ்க்கை துணை எப்படி இருக்கணும்னு செக் லிஸ்ட் போட்டு அதற்க்கான பொண்ண/பையனை  தேடி அலைந்து காதலிப்பது கூட எதோ ஒரு எதிர்பார்ப்பினால் ஒழிய உங்க காதல் கூந்தல் எல்லாம் என் கண்ணனுக்கு தெரியல.

காதல் ல பிரிவு பிறரால் வந்தால்  கூட சமாளித்து வெற்றி பெற முடியும் ன்னு நினைகிரவன் தான் அந்த பக்கம் போகணும்(எண்ணித்துணிக கருமம் ) . ஆனா நீங்களா வே ப்ரேகப் முடிவுக்கு வரும் பொது உங்கள் காதல் மீது எனக்கு மிகப்பெரிய சந்தேகமே வருது எனக்கு.

வாழ்கையில  ல நிறைய நல்ல விஷயம் நிறைய ட்ட விஷயம் உண்டு.கனி எது காய் எதுன்னு தெரிந்து உண்ணனும்..

மறுபடியும் சொல்றேன் கடுப்புல எழுதுன ஒரு ப்ளாக், ஜாலியா படிச்சிட்டு போய்டே இருககனும் , அட்ரெஸ் கேட்டு அடிகவெல்லாம் வரக்கூடாது. மீ அப்பாவி !

Thursday 26 February 2015

கிராமத்தான்..

முருகனுக்கு என் முதல் வணக்கம் !! அவனின்றி நானிலையே !!!

கிராமத்தான்..

ப\நாமளும் ஒரு பிளாக்கு எழுதலாம்னு தோனியவுடனே  சட்டென்று வந்த தலையங்கம்..ரொம்ப சிரத்தை எடுத்து வைக்காத  பேரு தான் இது,

பேன்ட் சட்ட ஷு சகிதம் பட்டணத்தில் லேப்ட்ப்போடு ஒரு ஆசாமி காலையில 9 மணிக்கு நாயை விட  வேகமா பஸ் பிடிக்க ஓடுவான், சாயுங்காலம் 7 மணிக்கு நடக்க கூட  முடியாமல் சிந்தனையை எங்கோ ஓட விட்டபடி அதே ஆசாமி பஸ்ஸ விட்டு இறங்கி ரூமுக்கு போவான் பாருங்க .. அந்த கூடத்துல ஒருத்தன பிடிச்சு கேளுங்க "கிராமத்தான் " ன்னா என்னனு. அவன் கண்ணுல சட்டென தோன்றி மறையும் ஆயிரமாயிரம் சுக துக்கங்கள் சொல்லிடும் உங்களுக்கான விளக்கத்தை.. அங்கே காணும் பாலிய சிநேகிதம் பாதின்ம அரட்டை கச்சேரிகள் குடும்ப பொறுப்பு என் ஏகப்பட்ட விஷயம் சொல்லிடும் பட்டிணத்து  சிறைவாசம் பற்றி.

தொடர்ந்து பேசுவோம் ..