Thursday 12 March 2015

எதிர்பார்பில்லாத அன்பைத்தான் காதல் ன்னு

பொத்தாம்  பொதுவா ஒரு பதிவே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

ஆக மிகசிறந்த மடத்தனம் என்பது காதலிப்பதும் அதற்காக தற்கொலை பன்னிகிறதும் தான். குடும்ப சூழல் காரணமாகவோ நோயின் தாக்கம் காரணமாகவோ தற்கொலை முடிவுக்குவந்தால் அவர்களை ஆறுதல்படுத்தி வாழ்க்கைன்னா என்னான்னு(நமக்கு தெரிஞ்சத )எடுத்து சொல்லி கடவுள் இருக்கான் ன்னு சொல்லலாம். காதல் க்காக சுசைடுன்னு ஒன்னு வந்தா  நம்ம   செலவுல  விஷம் தான் வங்கி தரத்தான் முடியும்.

என் நண்பன் ஒருத்தன் இஸ்கூல் படிக்கையுல லவ் பெயிலியர் ன்னு  சிகரெட்ல கைல அஞ்சாறு  சூடு போட்டு இருந்தான் .. இந்த உலகத்தில நம்ம விட ஒரு முட்டாள் இருக்கான்னு நினைக்கவைத்த தினம்அன்று. அதுக்கப்புறம் இன்று வரை நான் தேடுற ஒரே விஷயம், லவ்ன்னா என்னவா இருக்கும்ன்னு தான். எதிர்பார்பில்லாத அன்பைத்தான் காதல் ன்னு சொல்லலாம். அத படைத்தவன் கிட்டயும் அம்மா கிட்டயும் மட்டும் தன பெற முடியும் . வரப்போற வாழ்க்கை துணை எப்படி இருக்கணும்னு செக் லிஸ்ட் போட்டு அதற்க்கான பொண்ண/பையனை  தேடி அலைந்து காதலிப்பது கூட எதோ ஒரு எதிர்பார்ப்பினால் ஒழிய உங்க காதல் கூந்தல் எல்லாம் என் கண்ணனுக்கு தெரியல.

காதல் ல பிரிவு பிறரால் வந்தால்  கூட சமாளித்து வெற்றி பெற முடியும் ன்னு நினைகிரவன் தான் அந்த பக்கம் போகணும்(எண்ணித்துணிக கருமம் ) . ஆனா நீங்களா வே ப்ரேகப் முடிவுக்கு வரும் பொது உங்கள் காதல் மீது எனக்கு மிகப்பெரிய சந்தேகமே வருது எனக்கு.

வாழ்கையில  ல நிறைய நல்ல விஷயம் நிறைய ட்ட விஷயம் உண்டு.கனி எது காய் எதுன்னு தெரிந்து உண்ணனும்..

மறுபடியும் சொல்றேன் கடுப்புல எழுதுன ஒரு ப்ளாக், ஜாலியா படிச்சிட்டு போய்டே இருககனும் , அட்ரெஸ் கேட்டு அடிகவெல்லாம் வரக்கூடாது. மீ அப்பாவி !

No comments:

Post a Comment